ஒடிசா ரயில் விபத்து இந்திய மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையில் வசிக்கும் இரக்க உள்ளம் கொண்ட இதயங்களை உலுக்கிய ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து எலக்ட்ரோனின் இன்டெர்லோக் சிஸ்டம் பிழைத்தமை தான் காரணம் என்று கூறப்படுகின்ற நிலையில் சிபிஐ (CBI ) களத்துக்கு வந்துள்ளது. இதன் பின்னாவது இதற்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பது பலரது நோக்காக உள்ளது.
தற்போது உள்ள நவீனத்துவத்தில் இந்த எலக்ட்ரோனின் இன்டெர்லோக் சிஸ்டம் பிழை வர 0% கூட வாய்ப்பில்லை என்பதே பல பொறியியலாளர்களது கருத்தாக உள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழுப்பொறுப்பும் அவரையே சாரும் என்றும் இப்போது எதிர் கட்சிகள் கூச்சல் இடுகின்றன.
இந்த நிலையில் முதலில் 280 பேர் என்ற கணக்கு பின் 273 பேர் மரணம் என ஏன் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தளம்பல் நிலையும் பலரது சந்தேகத்துக்கு வித்திட்டுள்ளது.101 சடலங்கள் இன்னும் இனம் காணப்படாமல் உள்ளநிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர் பலரும் இன்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
ஹாலுசினேஷன் ,சாப்பிட முடியா நிலை, மணத்தல் போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.193 உடலில் 83 மாத்திரம் இனம் காணப்பட்ட நிலையில் மற்றைய உடல்களை ரப் செய்து வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.எனவே குளிரூட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு விபத்து என்பதை சாதாரணமான ஒன்றாக பார்க்கவே முடியாது ஒரு குடும்பம் அதன் தலைவனையோ தலைவியையையோ அல்லது குடும்ப தலைமுறையையோ இழந்திருக்கலாம். பல வீட்டிலும் சோகம் தாண்டவம் ஆடலாம் .
மனித தவறு இல்லை என்று உரியவர் பின் வாங்கலாம். இறந்தவரின் விதி என்றும் பலர் சொல்லலாம் இது முழுமையாக மனித தவறினால் நடந்த ஒன்றெனவே பார்க்கமுடிகிறது. அப்படி ஒரு தவறு நடந்திருப்பின் அதற்கு காரணம் யார் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே பலரது நோக்கமாக உள்ளது. இறந்தவர் கதை முடிந்து விட்டது இன்னும் வாழ வேண்டிய இறந்தவர் சார் குடும்பத்தின் நிலை இந்த விபத்தில் ஊனமானவர்கள் , மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இவர்களின் வாழ்க்கைக்காக இறைவனை பிரார்த்திப்போம் .