மிகவும் கொடூரமாக அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில், கப் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கூறப்பட்ட பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 11 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
தெஹியத்தகண்டி பிரதேசத்திலிருந்து அரலகங்வில பிரதேசம் நோக்கி பயணித்த கப் வாகனம், பிரத்தியேக வகுப்புக்கு சென்று வந்த 14, 16 வயதுடைய சிறுவர்கள் மீது மோதி விபத்துச் சம்பவித்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் காயமடைந்த 04 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், 07 பேர் அரலகங்வில வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட16 வயது மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ரத்மல்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.