வெறித்தனமான ரசிகர் ஒருவர் WWE வீராங்கணையொருவரின் வீடு புகுந்து அவரை கடத்த முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து, அந்த வெறித்தன ரசிகரிடமிருந்து பாதுகாப்பு கோரி அந்த வீராங்கணை நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
WWE சூப்பர் ஸ்டார் சோனியா டெவில்லை கடத்த சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சோனியா டெவில் என்ற பெயரில் WWE போட்டிகளில் கலந்து கொள்பவர் டாரியா பெரெனாடோ.
அவரை கடத்தி வருவதற்காக தென் கரோலியாவிலிருந்து புளோரிடாவிற்கு சென்றுள்ளார் 24 வயதான பிலிப் தோமஸ் என்ற வெறித்தனமான ரசிகர்.
இப்பொழுது அவர் மீது ஆயுதக் கடத்தல், ஆயுதக் கொள்ளை, கடத்தல் முயற்சி மற்றும் கிரிமினல் குறும்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பெரெனாடோவை கடத்த அவர் 8 மாதங்களாக திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பெரெனாடோவின் வீட்டிற்கு வெளியே நீண்டநேரமாக உட்கார்ந்திருந்து விட்டு, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார்.
கதவு திறக்கப்பட்டதும் அலாரம் ஒலித்து பெரனாடோவை எச்சரித்தது.
வீட்டுக்குள் அவர் நுழைந்த போது, பெரனாடோவின் சக WWE நட்சத்திரமான மாண்டி ரோஸும் அங்கிருந்தார். இருவரும் தப்பி ஓடினர்.
பின்னர் 911 ஐ அழைத்து தகவல் தெரிவித்தார். பொலிசார் சென்ற போதும் தோமஸ் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
கத்தி, பெரெனாடோவை கடத்தி செல்ல zip ties, டேப் உள்ளிட்ட பொருட்களையும் அவர் எடுத்து வந்திருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
ஹில்ஸ்போரோ கவுண்டி ஷெரிப் சாட் க்ரோனிஸ்டர் கூறும்போது, தோமஸுக்கு பெரனாடோவுடன் ஒரு “குழப்பமான ஆவேசம்” இருப்பதாகவும், அவளை ஒருபோதும் சந்திக்கவில்லை என்றாலும் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் அவளைப் பின்தொடர்ந்ததாகவும் கூறினார்.
தோமஸிடமிருந்து பாதுகாப்பு கோரி பெரனாடோ நீதிமன்ற மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.