செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்

2 minutes read

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது.

சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனைப் படைத்துள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவச பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவுகள், ஒற்றுமையை வளர்க்கும் குடும்ப தினம், நோன்புத் துறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான விழாக்கள், இறகு பந்து விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், மாணவர்களுக்கான கல்வி உபகார நிதி வழங்குதல், முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு ஆடைகள், சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்குதல், மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் நன்கொடை வழங்குதல், பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக நல பணியாற்றுதல் உள்ளிட்ட சேவைகளைச் செய்து, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து அரும்பணி ஆற்றி வருகிறது.

சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் தலைமையில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா, சங்கம் ஆற்றிய கல்வி மற்றும் சமூக நலப் பணிகளை எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளில் நடத்திய 100 நிகழ்வுகளின் தொகுப்பு காணொளியாக வெளியிடப்பட்டது. நாகூர் ரூமி எழுதிய “மீண்டுமோர் கருவறை தந்த தாயே!” என்ற பாடலை மாணவிகள் சினேஹா முரளி மற்றும் அனுமிதா முரளி இணைந்து பாட, “ஜமால் ஜமால் நீ வாழ்கவே!” என்ற பாடல் இசைமணி பரசு கல்யாண் குரலில் ஒலித்தது. கல்லூரியின் செயலர் முனைவர் காஜா நஜீமுதீன் சாஹிப், பொருளாளர் ஜமால் முஹம்மது சாஹிப், முதல்வர் முனைவர் இஸ்மாயில் முஹைதீன், பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் மற்றும் கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் சுபஹான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தில் திருச்சியில் 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜமால் முஹம்மது கல்லூரி  கடந்த 70ஆண்டுகளாக உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More