வடக்கு மாகாண விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக விவசாய பொருளாதார அபிவிருத்தி மையம் ஓன்று பென் ஜின்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் உருவாக்கபட உள்ளது.
அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் அருகே அமைய உள்ள இந்த மையமானது பெருமளவு கடைத் தொகுதிகளைக் கொண்டு நவீன வசதிகளுடனும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்குமான போக்குவரத்து வலையமைப்புடனும் அமைய உள்ளது.
இதன்மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாடு சந்தைவாய்ப்பினை உள்ளூர் விவசாய பொருட்களுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென பென் ஜின்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நிதியியல் ஆலோசகருமான கோணேஷ் இரத்தினகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் முதல் கட்டமாக சுமார் 240 வர்த்தக நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வாகன தரிப்பிடங்கள், உரிய பராமரிப்பு முகாமைத்துவ குழு என பல்வேறு வசதிகளுடன் கூடிய உள் கட்டமைப்புடன் இந்த மையம் உருவாக உள்ளதாக தெரிவித்தார்.
இன்னும் ஒரு வருட காலப்பகுதியில் விவசாயிகளினதும் பொதுமக்களினதும் பாவனைக்காக விவசாய அபிவிருத்தி மையம் இயக்க ஆரம்பிக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.