எடின்பரோ மரதனில் பங்குபெற உள்ள வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக அடையாள மரதன் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஞாயிறுக்கிழமை மே 29ம் திகதி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டின் தலைநகர் எடின்பரோவில் நடைபெற இருக்கின்ற உலகப்புகழ் பெற்ற நிகழ்வான எடின்பரோ மரதனில் “மண்ணின் மைந்தன்” முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு சுமார் 42 கிலோமீற்றர் தூரத்தினை ஓடவுள்ள நிலையில் கிளி மக்கள் அமைப்பினால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேதினம் ஞாயிற்றுக்கிழமை காலை கிளிநொச்சியைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட தொண்டு அமைப்புக்கள் இணைந்து தாயகத்தில் எழுச்சியுடன் அடையாள மரதன் நிகழ்வை முன்னெடுக்கின்றன. பரந்தன் சந்தியிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி பசுமைப் பூங்கா வரை நடைபெற உள்ளது. தன்னிறைவு உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் மரவெள்ளி கிழங்கினை உணவாக பரிமாறுவதுடன், கலந்துகொள்ளபவர்களுக்கு மரவள்ளித்தடி வழங்கி வைக்கப்பட உள்ளது.
கிளி பீப்பிள் அமைப்பினால் எதிர்வரும் ஜுலை 16ம் திகதி இலண்டனில் நடைபெற உள்ள மாபெரும் கிளிமக்கள் ஒற்றுகூடலில் அறிமுகப்படுத்த உள்ள சிறப்புக் கல்வித் திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக இம் மரதன் நிகழ்வில் கலந்துகொண்டு வைத்தியர் சத்தியமூர்த்தி நிதி சேகரித்து வருகின்றார்.
கீழுள்ள அவரது நிதி சேகரிக்கும் இணைப்பில் மேலதிக விபரங்களைப் பார்வையிடலாம்;
https://www.totalgiving.co.uk/mypage/dr_t_sathiyamoorthy
கிளிநொச்சியிலும் எடின்பரோவிலும் நடைபெறும் மரதன் நிகழ்வுகளை நேரலை செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. கீழ் உள்ள இணைப்பில் நேரலையினைப் பார்வையிடலாம்;
https://zecastlive.com/event/861005/template
கிளிநொச்சி நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள்;
1.கல்வி கலாசார அபிவிருத்தி அமையம்.
2. பொன் சபாபதி நற்பணி மன்றம்.
3. வீஸ்மர் நிதியம்.
4. இலங்கை செஞ்சிலுவை சங்கம்.
5. கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்பு சம்மேளனம்.
6. கனகபுரம் விளையாட்டு கழகம்.
7. Kili Rotary club
8. Kili City Lions club
9. Kili New Century Lions Club.
10. KDET
11. KDEF
12. 2012- உயர்தர மாணவர் அணி கிளிநொச்சி மகாவித்தியாலயம்.
13. கிளி/ அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்
14.இராமநாதபுரம் RMV – பழையமாணவர்கள்
15.வட்டக்கச்சி VCC- பழையமாணவர்கள்
16.பெரியகுளம் நண்பர்கள் வட்டம்
17.முரசுமோட்டை நண்பர்கள் வட்டம்
18.பரந்தன் நண்பர்கள் வட்டம்
19.காவேரி கலா மன்றம்.
20.கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம்.
21.கிளி நகர் வர்த்தகர் சங்கம்.
22. கிராம அபிவிருத்தி சங்கம் கனகாம்பிகைக்குளம்.
23. ஜனநாயக இளைஞர் அமைப்பு.
24. கிசோர் சனசமூக நிலையம் பாரதிபுரம்.
25. கலைவாணி சனசமூக நிலையம் யூனியன் குளம்.
26. கிளி நகர் கிராம அபிவிருத்தி சங்கம்.
27. கிளி நகர் சனசமூக நிலையம்.
28. கிளி நகர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்.
29. கிளிநொச்சி ஊடக மையம்.
30. இளந்தளிர் சனசமூக நிலையம் கோணாவில்.
31. கிராம அபிவிருத்தி சங்கம் கோணாவில் கிழக்கு.
32. யங்ஸ்டார் விளையாட்டு கழகம் கோணாவில்.
33. அதிபர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்டம்.
34. இளைஞர் சேவைகள் மன்றம் கிளிநொச்சி மாவட்டம்.
35. கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கம்.
36. கிராம அபிவிருத்தி சங்கம் திருநகர்.
37. சனசமூக நிலையம் திருநகர்.
38. கலைமகள் விளையாட்டு கழகம் சாந்தபுரம்.
39. கலைமகள் இளைஞர் கழகம் சாந்தபுரம்.
40. கிராம அபிவிருத்தி சங்கம் சாந்தபுரம்.
41. கணேசபுரம் சனசமூக நிலையம்.
42. நாறோ நிறுவனம்.
43. தமிழ்ச் சங்கம் கிளிநொச்சி மாவட்டம்.
44. பண்டிதர் பரந்தாமன் கலைக் கல்லூரி.
45. YMCA கிளிநொச்சி.
46. எழுதமிழ் நற்பணி மன்றம் கிளிநொச்சி மாவட்டம்.
47. வடலிகள் இளைஞர் அமைப்பு யாழ்ப்பாணம்.
48. பகிர்ந்துண்போம் அமைப்பு வடக்கு மாகாணம்.
49. அபிசேக் பவுண்டேசன் கிளிநொச்சி மாவட்டம்.
50. தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் கிளிநொச்சி மாவட்டம்.
51. ஜடாயு தன்னார்வ தொண்டு நிறுவனம் யாழ்ப்பாணம்.
52. நோயாளர் நலன்புரிச்சங்கம் மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி.
53. சனசமூக நிலையம் பரந்தன்.
54. இளைஞர் வட்டம் பரந்தன் (விளையாட்டு கழகம்)
55. கிராம அபிவிருத்தி சங்கம் பரந்தன்.
56. செந்தணல் விளையாட்டு கழகம் செல்வாநகர்.
57. உதவும் உறவுகள் – சுவிஸ்லாந்து
58. எழுகை அமையம் கிளிநொச்சி