பாடசாலைக்கு செல்ல முடியாத மாணவிகளைகருத்தில்கொண்டும்தொழில்வாய்ப்பற்றபெண்களிற்கு தவுவதற்காகவும்ஆப்கானிஸ்தானின் தலைநகரில்நூலகமொன்றை பெண்கள் ஆரம்பித்துள்ளனர்.
ஆப்கானின் மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த நூலகத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆப்கானின் ஆட்சி பொறுப்பை ஏற்றதுமுதல் தலிபான்கள் பெண்கள் ஆண் துணையின்றி வீட்டை விட்டு வெளியேற கூடாது வெளியில் செல்லும்போது முகத்தை மூடவேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
எனினும் நகர்புறங்களில் சில பெண்கள் இந்த கட்டுப்பாடுகளை புறக்கணித்துள்ளனர்.
நாங்கள் நூலகத்தை இரண்டு நோக்கங்களிற்காக ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார் ஜூலியா பர்சி பாடசாலைகளிற்கு செல்ல முடியாத யுவதிகளை கருத்தில்கொண்டும் தொழில்வாய்ப்பற்ற பெண்களை கருத்தில்கொண்டும நூலகத்தை ஆரம்பித்துள்ளோம் என அவர் குறிப்;பிட்டார்.
நூலகத்தை உருவாக்க உதவிய கிறிஸ்டல் பயட் பவுண்டேசன் என்ற ஆப்கானின் பெண்கள் உரிமை அமைப்பிற்கு ஆசிரியர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் நூல்களை வழங்கியுள்ளனர்.
உயர்தர வகுப்பு மாணவிகளிற்காக பாடசாலைகளை மீளதிறப்போம் என்ற வாக்குறுதியிலிருந்து தலிபான் விலகியுள்ளது.
பல பதின்மவயது யுவதிகள் கல்விக்கான வாய்ப்பை இழந்துள்ளனர் அதேவேளை கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு பெண்களும் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர் என சர்வதேச அபிவிருத்தி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களின் உரிமைகளை மதிப்பதாக தெரிவித்துள்ள தலிபான் உயர்தர மாணவிகளிற்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்து வருகின்றது.
பெண்களை பொதுவாழ்க்கையிலிருந்து அகற்றும் தலிபானின் நடவடிக்கைகளை மேற்குலகங்கள் கண்டித்துவருகின்றன.
அவர்களால் எங்களை சமூகத்திலிருந்து துடைத்தெறிய முடியாது ஒரு துறையிலிருந்து அகற்றினால் இன்னுமொரு துறையில் நாங்கள் தொடருவோம் என மகளிர் உரிமை செயற்பாட்டாளர் மஜோபா ஹபீபி தெரிவித்தார்.