ஈரானில் மூக்கை உடைத்து, தலையில் பலமாக தாக்கி சந்தேகத்திற்கிடமான காயங்களுடன் 17 வயது பெண்ணின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன, 17 வயது சிறுமி நிகா ஷகராமியின் உடலை பாதுகாப்புப் படையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது பெண் மஹ்சா அமினி போலீஸ் காவலில் இறந்தார்.
அவரது மரணத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த கொடூரக் கொலை மக்களைக் மேலும் கொதிப்படைய செய்துள்ளது.
அடக்குமுறையில் இதுவரை 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.