அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த பூகம்பம் இன்று உணரப்பட்டுள்ளது .
மேற்கு ஜாவா மாகாணத்தின் சியான்ஜூரை (Cianjur) மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 பதிவாகியுள்ளது.
பல வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.