ஏமாற்றத்துடன் நோயாளர்கள்:
இங்கிலாந்தில் சம்பள உயர்வு கோரி, அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால், நோயாளர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
இன்றையதினம் (14) வைத்திய சேவையைப் பெறும் பொருட்டு அரச வைத்தியசாலைகளுக்குச் சென்ற நோயாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
சென். மேரிஸ் வைத்தியசாலை முன்னாலும் வைத்தியர்கள் வேலை நிறுத்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணவீக்கம் அதிகரிப்பு, பணிச்சுமை, ஊதியக்குறைப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்தே, தேசிய மருத்துவ சேவையின் வைத்தியர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.