TikTok மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்கா, இந்தியா, கனடா, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் TikTok மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது நியூஸிலாந்தும் இணைந்துள்ளது.
ByteDance எனும் சீன நிறுவனத்துக்குச் சொந்தமான TikTok காணொளிப் பகிர்வுச் செயலி, தரவுகளைத் திருடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தொடர்புடைய செய்தி : TikTok-க்கு பெல்ஜியத்திலும் தடை
இந்நிலையிலேயே, பல நாடுகள் TikTok செயலி மீது கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
குறிப்பான அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான கணினி, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் TikTok செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து
நியூஸிலாந்தில் நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய சாதனங்களில் TikTok செயலி தடைசெய்யப்பட்டவுள்ளது. இணையப் பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு அரச அதிகாரி தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் அனைத்துச் சாதனங்களிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இங்கிலாந்து
மற்றும் அதிகாரிகளும் அரசாங்கக் கைத்தொலைபேசிகள் அனைத்திலும் TikTok செயலியைத் தடைசெய்யவுள்ளனர். பாதுகாப்பின் அடிப்படையில் அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
அமெரிக்கா
ByteDance நிறுவனம், Tiktokஇல் உள்ள அதன் பங்குகளை விற்காவிட்டால் செயலியைத் தடை செய்யவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளது. The Wall Street Journal அறிக்கை அந்தத் தகவலை வெளியிட்டது.
எனினும், அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.
அந்நாட்டில் ஏற்கெனவே அரசாங்கம் சார்ந்த கைத்தொலைபேசிகளில் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் ஆகியவையும் தற்காலிகமாக அந்நடவடிக்கையை எடுத்துள்ளன.