பிரான்ஸில் அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 64ஆக உயர்த்தும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்காங்கே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குகொண்டிருந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதல் வெடித்துள்ளது.
பிரான்ஸ் – பாரீஸ், கான்கார்ட் சதுர்க்கத்துக்கு அருகே குப்பைகளை தீவைத்து எரித்து அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிஸார் கலைக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அந்த இடங்கள் போர்க்களமாகக் காட்சியளித்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
இதையும் பாருங்க : குப்பைகளால் நிரம்பும் அழகிய பாரிஸ் நகரம்!