கனடா, அல்பெர்ட்டா (Alberta) மாநிலத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர், நேற்று (16) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர தொலைபேசி அழைப்பை ஏற்று, குடும்ப பிரச்சினை ஒன்றை விசாரிப்பதற்காக சென்ற 30 மற்றும் 35 வயதுடைய பொலிஸ் அதிகாரிகளே, இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்த ஆண் ஒருவராலேயே பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். அந்நபர், பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அங்கிருந்த அவரது உறவுக்காரப் பெண்ணையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அந்நபர் தன்னைத் தானே சுட்டு தனது உயிரையும் மாய்த்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.