இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பிரான்ஸுக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதற்கான எதிர்ப்பு போராட்டங்களை அடுத்தே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் வேண்டுகோளுக்கு இணங்கவே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் பிரான்ஸுக்கான அரசுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : பிரான்ஸில் போராட்டக்காரர்கள் – பொலிஸார் மோதல்
மன்னரின் பயண நாளில், ஒரு நாள் ஓய்வூதியப் போராட்டத்துக்கு அந்நாட்டுத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததை அடுத்தே, ஜனாதிபதி மாக்ரோன் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் பாரிஸ் மற்றும் போர்டியாக்ஸ் ஆகிய நகரங்களுக்கான பயணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்தது.
ஆனால், இந்த இரு நகரங்களிலும் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனை சார்லஸ் III மற்றும் ராணி கமிலா ஆகியோரின் மூன்று நாள் பயணத்தை ஒத்திவைக்கும் முடிவை அறிவித்தது.