சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், சீனாவுக்கு நாளை உத்தியோகப்பூர்வ விஜயம்மேற்கொள்ளவிருக்கிறார்.
சீனாவின் புதிய பிரதமர் லீ சியாங்கின் (Li Qiang)அழைப்பை ஏற்றுப் பிரதமர் லீ அங்கு செல்கிறார்.
முதலில் Guangdong சென்றபிறகு லீ ஹைனானில் நடக்கும் போ’ஆவ் (Bo’ao) கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளதுடன், அங்கு பிரதமர் லீ உரையாற்றவிருக்கிறார்.
அத்துடன், தலைநகர் பெய்ச்சிங்கில் சீன ஜனாதிபதி சி சின்பிங்கைச் சந்திக்கவுள்ள லீயின் சீனப் பயணம் அடுத்த சனிக்கிழமை நிறைவுக்கு வரும்.
இதேவேளை, பிரதமர் லீயுடன் அவரது மனைவியும் சில அமைச்சர்களும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமர் சிங்கப்பூரில் இல்லாத காலத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் இருவரும் தற்காலிகப் பிரதமர்களாகச் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.