காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையில் பஞ்சாப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அம்ரித்பால் சிங், நாளொரு வேடத்தில் ஹரியானா மற்றும் புதுடெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, அம்ரித்பாலுக்கு அடைக்கலம் தந்து உதவிய நபர்களை பஞ்சாப் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று பல்வந்த் சிங் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் அம்ரித்பாலின் கூட்டாளி கோரக் பாபாவை தப்பிக்க உதவியதாக கூறப்படுகிறது. கோர்க்கா பாபா கைது செய்யப்பட்டதையடுத்து பல்வந்த் சிங்கும் சிக்கினார்.
100க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்துள்ள பஞ்சாப் பொலிஸார் 7 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.