செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான புடவை கடைகள் தீயில் எரிந்து நாசம்

பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான புடவை கடைகள் தீயில் எரிந்து நாசம்

1 minutes read

பங்களாதேஷின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார், தலைநகரான டாக்காவில் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன.

இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

கரும்புகையுடன் வானுயுரத்து தீப்பிழம்பு எழுந்த நிலையில், மிகவும் நெரிசலான பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் இந்த பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More