பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP), அதன் வட்டி விகிதத்தை 21 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
இந்த வட்டி விகித உயர்வு பாகிஸ்தானின் நிலைமையை மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே வரலாறு காணாத நிதி பற்றாக்குறை, உணவு பஞ்சம் என்று பாகிஸ்தான் இருக்கும் நிலையில், தற்போது வட்டி விகித உயர்வு பாகிஸ்தானின் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாராந்திர பணவீக்கம் 45 சதவீதத்தை தொட்டுள்ளது. இதனால் அத்தியவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் தான் பாகிஸ்தானின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை 21 சதவீதம் கடுமையாக உயர்த்தியுள்ளது.
இதையும் பாருங்க : இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் 4.25% ஆக உயர்வு