June 2, 2023 12:20 pm

இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் 4.25% ஆக உயர்வு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் உயர்வு

இங்கிலாந்தில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக இங்கிலாந்தின் மத்திய வங்கியால் வட்டி விகிதங்கள் 4% இலிருந்து 4.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து, தொடர்ந்து 10ஆவது முறையாக இவ்வாறு வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வாழ்க்கைச் செலவு எதிர்பார்த்ததை விட பாரியளவில் அதிகரித்துள்ளதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பணவீக்கம் குறையும் என்று கணித்திருந்த போதிலும், கடந்த பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 10.4% ஆக உயர்ந்தது.

சமீபத்தில் அமெரிக்க வங்கிகள் இரண்டு தோல்வியடைந்ததையடுத்து, உலகளாவிய ரீதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறித்த கவலைகள் நீடித்து வரும் நிலையில், மேற்படி வட்டி விகிதத்திலும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி : மூடப்பட்ட வங்கிகள்; மக்களுக்கு ஜோ பைடன் நம்பிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்