பல நாடுகளிலும் சுற்றுலா காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈஸ்டர் கொண்டாட்ட வாரத்தில் பிலிப்பைன்ஸில் கடலில் மூழ்கி 72பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இல்லாதவாறு குறிப்பிட்ட ஒரு வாரத்தில் இத்தகைய மரணம் பதிவாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவை முன்னிட்டு விதிக்கப்பட்டிருந்த பயணகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனை அடுத்து பிலிப்பைன்ஸில் ஈஸ்டர் பண்டிகைக்காக ரெசோட்கள், கடற்கரைகள் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளன.
இதை பயன்படுத்தி சிறுவர்கள் பெற்றோரின் துணையின்றி கடலில் தனியாக குளிக்க சென்றமையினால் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. அது மாத்திரம் இல்லாமல் சிலர் மதுபோதையில் கடலில் குளித்தமையினாலும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுகியுள்ளது.