இஸ்ரேலில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட லண்டன் சகோதரிகளின் தாயாரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விடுமுறைக்காக இஸ்ரேல் – கலிலி கடற்கரைக்கு பயணித்த லண்டன் குறித்த குடும்பம் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 48 வயதான லூசி தி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், அவரது மகள்களான 20 வயது மாயா மற்றும் 15 வயது ரினா ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
2005 வரை லண்டனில் குடியிருந்த இந்தக் குடும்பம் அதன் பின்னர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளது. கொல்லப்பட்ட மேற்படி சகோதரிகள் இருவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் ஆவர்.
இவர்கள் பயணித்த வாகனம் 22 தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி, இவர்களின் வாகனம் அருகே செல்வதும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணித்த லண்டன் சகோதரிகளின் குடும்பம்
இதேவேளை, முன்னதாக கொல்லப்பட்ட மகள்கள் மற்றும் வைத்தியசாலையில் உயிரிழந்த மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட தந்தை, “என் அழகான மனைவி லூசியும் நானும் எங்கள் குழந்தைகளை நல்ல மதிப்புகளுடன் வளர்க்கவும், நல்லதைச் செய்யவும், மேலும் நல்லதை உலகில் கொண்டு வரவும் முயற்சித்தோம். ஆனால், ஐயோ, ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பம், இப்போது நான்கு பேர் கொண்ட குடும்பம்” என்றார்.
இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.