இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் லோனவாலா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து நடந்த சமயத்தில் சுமார் 40 பயணிகள் பஸ்ஸில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.