தென் அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட பிரேசில் நாட்டில் சிறுவர் காப்பகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சிறுவர் காப்பகம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் (ஒரு சிறுவன் மற்றும் பெண் ஒருவர்)மேலும் இருசிறுவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.இந்த தீ விபத்து எவ்வாறு நடைப்பெற்றது என்ற விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.