இத்தாலி, ரிவியரா கடற்கரையில் உள்ள வண்ணமயமான ஒரு மீன்பிடி நகரமே போர்ட்டோபினோ (Portofino).
கோடைக்காலத்தில் அந்த நகரத்துக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ‘selfie’ எடுக்கக்கூடாது என்பது.
தடையை மீறினால் 300 டாலர் அபராதம் விதிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகளின் நடமாட்டத்தைக் குறைக்கச் சில பகுதிகளில் காத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தன.
போர்ட்டோபினோவில் சுமார் 500க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.