சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. ரசிய உக்ரைன் போர் நடை பெற்று வரும் நிலையில் ரசியாவின் மீதான தடை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா பெற்றோலை ஏற்றுமதி செய்கிறது.
பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியாகும் நிலையில், இது சவுதி அரேபியாவை விட சற்று அதிகமாக உள்ளதாக கெப்லர் தெரிவித்துள்ளது.
ஐரோப்பியவுக்கு இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணையை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
இதனால், சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணையை இந்தியாவிடமிருந்து தற்போது ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து வருகிறது.