பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
லாகூர், ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த ஷங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாநாடு இன்றும் நாளையும் (மே 4, 5) கோவாவில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்கவே பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியா வருகை தந்துள்ளார்.
கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பூட்டோ, கோவா வருகை தந்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2011 ஜூலை மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வருகை தந்தார்.
அதன்பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் யாரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. 12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாரி இந்தியா வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.