நேற்றைய தினம் திடீர் சூறாவளி தாக்கியதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . கான்ரோவில் தாக்கிய சூறாவளியுடன் மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.
அப்போது, புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணியில் இருந்தவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் விபத்தில் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுட்ன மீட்கப்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.