தென்கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபரை நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
38 வயதான அரவிந்த் சசிகுமார், சவுத்தாம்ப்டன் வே, கேம்பர்வெல்லில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கத்திக் காயங்களுடன் காணப்பட்டார் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1.31 மணியளவில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சசிகுமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, துப்பறியும் அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சல்மான் சலீம், 25 என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டில் சனிக்கிழமையன்று குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.