கிரீஸ் கடற்பகுதியிலிருந்து ஜூன் 14 அன்று, ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்காக சுமார் 750 பாகிஸ்தானியர்களுடன் சென்ற இழுவைப்படகு கடலில் மூழ்கியதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இன்று திங்கட்கிழமை (19) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
750 பேரில் குறைந்தது 500 பேரைக் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பாகிஸ்தானியர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக நம்பப்படும் 10 மனித கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.
பாக்கிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், பிரஜைகள் பலர் தங்களால் இயன்ற வழிகளில் நாட்டை விட்டு வெளியேறும் தருணத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.