செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீன உணவகத்தில் பாரிய வெடிவிபத்து; 31 பேர் மரணம்!

சீன உணவகத்தில் பாரிய வெடிவிபத்து; 31 பேர் மரணம்!

1 minutes read

வடமேற்கு சீனாவில் BBQ உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 31 பேர் மரணித்துள்ளனர் என பிபிசி அறிக்கையிட்டுள்ளது.

அத்துடன், இந்த விபத்திற்கு காரணமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஃபுயாங் BBQ உணவகத்தின் உரிமையாளரும் உள்ளடங்குவதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

யின்சுவான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த வெடிப்புக்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு தொடர்பான விசாரணை மற்றும் மீட்புப் பணிகளில் “முழு முயற்சிகள்” தேவை என்று சீன ஜனாதிபதி சீ சின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பணித்துள்ளார்.

சீனாவில் மூன்று நாள் டிராகன் படகு திருவிழா விடுமுறைக்கு முன்னதாக, பல குடும்பங்களும் நண்பர்களும் கொண்டாட்ட உணவுக்காக கூடும் நேரத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களும் உள்ளடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 20 வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக அவசர மேலாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, வெடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு உணவக ஊழியர் எரிவாயு கசிவை உணர்ந்தார்.

பின்னர் அவர் ஒரு திரவ எரிவாயு தொட்டியில் உடைந்த வால்வைக் கண்டுபிடித்தார். மேலும் வெடிப்பு ஏற்பட்டபோது அதை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More