இனிவரும் காலங்களில் இந்தியாவைப் போன்றே அமெரிக்காவிலும் தீபாவளி தின விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை முதன் முதலாக பென்சில்வேனியா மாகாணம் இயற்றியது.
இந்நிலையில், நியூயார்க் மாகாண நிர்வாக சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியுமான ஜெனிபர், தீபாவளி பண்டிகையன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா, செனட் சபை மற்றும் நிர்வாக சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த சட்டத்தை நிறைவேற்றும் முயற்சி இரண்டு ஆண்டுகளாக தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது நிர்வாக சபையின் ஒப்புதலை பெற்றுள்ளது.
கடந்தாண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.