நியூயோர்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் ஆக்கிரமித்துள்ளது. சுமார் மூன்று நாட்களாக சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன.
இது மட்டுமல்லாமல் சுரங்கப்பாதைகளிலும் இவை ஊடுருவியுள்ளது. ‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் நியூயார்க்கில் உள்ள பல குடியிருப்புவாசிகள் தங்கள் உடலில் சிறிய கொசு போன்ற பூச்சிகள் ஒட்டிக்கொண்டுள்ளதாக கூறியிருக்கின்றனர்.
சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், “இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- ஒருவகை கொசு) அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.