செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது

1 minutes read

இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட்  ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது எக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்ட்  ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே எக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் எக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி,  எக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் எக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More