கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதன் விமானி மரணித்துள்ளார் என அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஹெலிகாப்டரை, நேற்று முன்தினத்திலிருந்து (19 ) காணவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆல்பர்டா மாநிலத்தின் ஹேக் (Haig) ஏரிக்கு அருகே அது கண்டுபிடிக்கப்பட்டது.
தீயணைப்புப் பணிகளின்போது, அது நிலத்தில் மோதியதாகத் தெரியவருகிறது. சம்பவத்த்ன் போது ஹெலிகாப்டரில் 41 வயது விமானி மட்டுமே இருந்துள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் மரணித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த விமானி நாட்டிற்கு ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று கனடாப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார்.