இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணம் ஆக சென்றிருந்தார்.
அப்போது பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா அமெரிக்க நாடுகள் கையெழுத்திட்டன. குறிப்பாக ராணுவ தளவாடங்கள், ராணுவத்திற்கான ட்ரோன்கள் என்று முக்கிய ஒப்பந்தங்களும் அதில் அடங்கும்.
இந்த நிலையில் தற்போது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜீன் பியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் முக்கிய மைல்கல்லாக மாறி இருக்கிறது.
இந்தியா அமெரிக்கா உறவுகளை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான செயல் திட்டங்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவே கருதப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புதிய குழுவான ஐ2யூ2 பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஏற்கனவே நான்கு நாடுகளிடையே அந்த கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறது என்றார்.