தமது ஆட்சிகாலத்திலே இந்தியா பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது என நேற்றைய தின பாரத மண்டப திறப்பு விழாவில் மோடி அவர்கள் பேசியுள்ளார் .செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ளநிலையில் பிரகதி மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு பாரத மண்டபம் என பெயரிடப்பட்டு மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விளைவு;ல் பேசும் பொது மோடி சில விடயங்களை மக்கள் முன் வைத்துள்ளார் அவர் அதில் முக்கியமாக நாட்டின் இவ்வாறு பேசியுள்ளார்.
எங்களது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இரண்டாவது பதவிக்காலத்தில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இந்த சாதனைகளை அடிப்படையாக வைத்து பார்த்தால், மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். எனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும். இது மோடியின் உத்தரவாதம்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.