பாகிஸ்தானின் பஜூர்கர் நகரில் இடம்பெற்ற ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சியின் மாநாட்டில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென குண்டு வெடித்தது. இதனையடுத்து அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தியதில் மர்ம நபர் ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை படையாக செயல்பட்டது தெரிய வந்தது.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 40 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.
இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.