இங்கிலாந்தும் சிங்கப்பூரும் உத்திபூர்வ உறவை மேம்படுத்தக் கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளன.
பொருளியல், நீடித்த நிலைத்தன்மை, பருவநிலை, பாதுகாப்பு, தற்காப்பு போன்ற அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்.
இந்தியாவில் நடைபெறும் G20 உச்சநிலை மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் இடையில் வழசேட சந்திப்பு இடம்பெற்றது.
இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகத் சிங்கப்பூர் பிரதமர் லீ கூறினார்.
இவ்விரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றக் கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சுனக் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, இருநாட்டுத் தலைவர்களும் முதன்முறையாகச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.