நேற்றைய தினம் டெல்லியில் உள்ள பிரகதி மண்டபத்தில் ஜி20 மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்நாள் மாநாட்டின்போது இடைவேளை நேரத்தின்போது இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் ஈடுபட்டார்.
இதற்கிடையே, உலகத் தலைவர்களின் மனைவிகளுக்கு, இந்திய கலாசார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. சிறப்பு விருந்து ஜெய்ப்பூர் இல்லத்தில் அளிக்கப்பட்டது. அப்போது தினை உணவுகள் வழங்கப்பட்டதாகவும், தெருவில் விற்கப்படும் சில உணவுகளை ருசி பார்த்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு விருந்தில் துருக்கி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மொரிசீயஸ் நாட்டின் முதல் பெண்மணிகள் கலந்து கொண்டனர்.