இவ்வாண்டுக்கான G20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இம்மாநாட்டின் நிறைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேஸில் ஜனாதிபதி லூலா இனாசியோ டா சில்வாவிடம் (Luiz Inacio Lula da Silva) G20 தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
அதன்படி, அடுத்த ஆண்டு (2024) மாநாட்டை பிரேஸில் ஜனாதிபதி லூலா பொறுப்பேற்று நடத்தவுள்ளார்.
புதுடில்லியில் ஊடகவியலாளர்களை சந்தித்த லூலா, அடுத்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிரேஸில் வருகை தந்தால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என்று தெரிவித்தார்.
உக்ரேன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராய் அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.