19ஆவது ஆசிய விளையாட்டுகள், சீனாவின் ஹாங்சோ (Hangzhou) நகரில் நேற்று (23) தொடங்கின.
போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு, நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
இத் தொடக்க விழாவில் தென்கொரியா, மலேஷியா, சிரியா மற்றும் நேப்பாளம் போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டின் விளையாட்டுகளில் ஆசியாவின் 45 இடங்களிலிருந்து 12,000க்கும் அதிகமான விளையாட்டாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆசிய விளையாட்டுகள், சுமார் ஒரு வருட கால தாமதத்துக்குப் பின் நடைபெறுகின்றன.
சீனாவின் கடுமையான கொரோனா தொற்றுப் பரவல் விதிமுறைகளால் ஆசிய விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுகள், ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.