இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டின் புழக்கம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
கள்ளச் சந்தையில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவில் முன்பு புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாகப் புதிய 2000 ரூபாய் நோட்டு 2016ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
2000 ரூபாய் நோட்டை மீட்டுக்கொள்வது குறித்து இந்திய மத்திய வங்கி கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
இதன்படி, 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், அவர்களுடைய வங்கிக் கணக்கில் அந்தத் தொகையைச் சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.