கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமான இருந்த நல்லுறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளமையானது தற்காலத்தில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி – கனடா இந்திய விரிசல் நிலையில் வெள்ளை மாளிகை சொல்வதென்ன
இந்லையில், கனடாவின் ஒட்டாவா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறத்தியதாக வெளியான தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், “கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம்.
“வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். ஆனால், நிலைமையை மோசமடைய செய்ய
நாங்கள் விரும்பவில்லை.
“மேலும், இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அந்த முக்கியமான பணியை நாங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விரிசலின் பின்னணி
னடா சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வான்கூவர் நகருக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் அதை இந்தியா மறுத்துள்ளது.
குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக கனடா சொல்கிறது. இருப்பினும், இதுவரை எந்த ஆதாரத்தையும் கனடா வெளியிடவில்லை.
மேலும், கனடா மற்றும் இந்தியா ஆகியன அவற்றின் மூத்த அரசதந்திர அதிகாரிகளை தத்தம் நாடுகளை விட்டு வெளியேற்றினர்.
தொடர்புடைய செய்தி – கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்