சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஒக்டோபர் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய அந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அனைத்துலக அளவில் சீனியின் விநியோகம் குறைந்துள்ளது. இதனால் சீனியின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
உலகின் 2ஆவது மிகப் பெரிய சீனி உற்பத்தியாளரான இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் சீனி ஏற்றுமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
இதற்குமுன்னர் 10 மில்லியன் டன்னாக இருந்த சீனி ஏற்றுமதி கடந்த அறுவடைக் காலத்தில் 5.4 டன்னுக்குக் குறைந்துள்ளது.
இந்தியாவில் El Nino பருவநிலை மாற்றத்தால், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்தது. இதனால் சீனி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
வரட்சி வானிலையால் சீனி மற்றும் அரிசி ஆகியப் பொருள்களின் விலை கூடியது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்குதல் அதிகரித்தது.
எனினும், சீனி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றை உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.