காஸாவின் ராஃபா (Rafah) எல்லைப் பகுதியைத் திறந்துவிட எகிப்து ஜனாதிபதி அப்தல் பட்டாஹ் அல்-சிசி (Abdel Fattah al-Sisi) இணக்கம் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 கனரக வாகனங்களில் காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல அது வழியமைக்கவுள்ளது.
இஸ்ரேலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எகிப்து ஜனாதிபதியிடம் தொலைபேசியில் உரையாடியதை அடுத்து, ராஃபா எல்லை திறக்கப்படவுள்ளது.
எகிப்து வழியாக காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப்போவதில்லை என்று இஸ்ரேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குண்டும் குழியுமாக உள்ள ராஃபா எல்லைப் பகுதியைச் சரிசெய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
தொடர்புடைய செய்தி – இஸ்ரேல் விரைந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்