கனடா பிரஜைகளுக்கு இந்தியா மீண்டும் விசா வழங்கத் தொடங்கவுள்ளதாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (25) அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார்.
இந்தியா அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.
சீக்கியத் தலைவர் கொல்லப்பட்டது குறித்த விசாரணையில் ஒத்துழைக்குமாறு கனடா இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது.
கனடாவும் இந்தியாவும் தத்தம் நாட்டிலுள்ள தூதர்களை வெளியேற்றின.
இதனால் கனடா பிரஜைகளுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பூசலின் காரணமாகச் கடந்த வாரம் கனடா இந்தியாவிலிருந்து 41 அரசதந்திரிகளை மீட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்தி கனடா : இந்தியா உறவு தொடருமா அல்லது விரிசல் நீடிக்குமா?