கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், Apple நிறுவன பொருள்களின் விற்பனை தொடர்ந்து 4ஆம் காலாண்டாகச் சரிந்துள்ளது.
நிறுவனத்தின் வருமானம் 89.5 பில்லியன் டொலர் ஆகும். அதன் வரிக்குப் பிந்திய இலாபம் 23 பில்லியன் டொலர் ஆகும். கடந்த ஆண்டிலும் பார்க்க இது கொஞ்சம் குறைவாகும்.
4ஆம் காலாண்டில் iPhone கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதாக Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் கூக் தெரிவித்தார்.
ஆனால், Apple Music, iCloud போன்ற சேவைகள் மூலம் ஈட்டப்படும் பணம் இதுவரை இல்லாத அளவு சரிந்ததாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உலகளவில் கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை குறைந்திருப்பதாக Counterpoint நிறுவனம் தெரிவித்தது.
iPhone கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது. எனவே, அந்தப் போக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம் : AFP