கட்டாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகப் புதுடெல்லி மேல்முறையீடு செய்துள்ளது.
குறித்த 8 பேரும் இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் ஆவர்.
அவர்களுக்குத் தூதரக உதவி அனுமதிப்பட்டிருப்பதாக கட்டார் – டோஹாவில் இருக்கும் இந்தியத் தூதரம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை தொடர்பாகக் கட்டார் அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியா – புதுடெல்லி தெரிவித்துள்ளது.
அந்த 8 பேரும் வேவு பார்த்த சந்தேகத்தில் கடந்த ஆண்டு (2022) கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை கட்டார் வெளியிடவில்லை.
அந்த விவகாரத்தால் இந்தியாவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.