இங்கிலாந்தின் புதிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரனை (David Cameron), இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar)சந்தித்துள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான கெமரனின் புதிய நியமனத்துக்கு வாழ்த்துக் கூறிய ஜெய்சங்கர், அவரோடு நட்புறவுடன் பணியாற்றுவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறினார்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் வழிகள் குறித்து இருவரும் விரிவாய் விவாதித்ததாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மத்தியக் கிழக்கு, உக்ரேனியப் போர், இந்தோ-பசிஃபிக் நிலவரம் பற்றியும் இருவரும் விவாதித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.