நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத Gmail கணக்குகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் அகற்றவிருப்பதாக Google நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்கு நீக்கப்படக்கூடாது என்று நினைத்தால், பயனீட்டாளர்கள் தங்களுடைய பக்கங்களை மீண்டும் பயன்படுத்தவேண்டும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது.
குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் Gmail கணக்கையும் அதில் இருக்கும் தகவல்களைம் Google அகற்றிவிடும்.
மின்னஞ்சல் முகவரி மட்டுமல்லாமல், பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள், ஆவணங்கள் என அனைத்தும் அதிலிருந்து நீக்கப்படும்.
குறித்த Gmail முகவரி அகற்றப்படுவதற்கு முன் பல்வேறு முறை நினைவூட்டும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் என்றும் Google நிறுவனம் தெரிவித்துள்ளது.